Friday, November 14, 2014


குடும்ப நலம் அருளும் கும்பேஸ்வர 
ஸ்தோத்திரம்

/

குடும்ப நலம் அருளும் கும்பேஸ்வர ஸ்தோத்திரம்

நான்முகன் மகாமகக் குளத்தில் நீராடி கும்பேஸ்வரரைக் குறித்து துதித்த அரிய
 ஸ்லோகம் இது. சிவராத்திரி தினத்தன்று இத்துதியை பாராயணம்  செய்தால் 
குடும்பத்தில் ஏற்பட்ட சிவாபசாரம் நீங்கும். வாய்ப்பு உள்ளவர்கள் சிவராத்திரி 
நன்நாளில், கும்பகோணத்தில் உள்ள மகாமகக் குளத்தில்  நீராடி, அருகிலேயே 
கோயில் கொண்டிருக்கும் கும்பேஸ்வரரை தரிசிக்கலாம். இந்தத் துதியைப்
 பாராயணம் செய்வதால், அகால மரணமும் மரண  பயமும் விலகும். ஜாதகத்தி
ல் குரு, சூரியன் இரு கிரகங்களின் தோஷங்கள் நீங்கும். புத்ர பாக்கியம் கிட்டும்.
 நோய்கள் அகன்று, ஆரோக்கியம் மேன்மையுற்று, குடும்ப நலம் பெருகும். 

நமோ நம: காரண காரணாய ஸ்ரீமத்ஸுதாகும்பக 
விக்ரஹாய
கல்யாண ஸாந்த்ராய குணாகராய ஸ்ரீகும்பலிங்காய  
நமஸ்ஸிவாய

காரணங்களுக்கெல்லாம் காரணமாக இருப்பவரும் அம்ருத கலசத்தையே 
தனது வடிவாகக் கொண்டவரும் கல்யாண குணங்கள் அனைத்தும் நிரம்பிய 
வரும் அதற்கு இருப்பிடமானவருமான, கும்பலிங்கமான சிவனே... நமஸ்காரம்.

பீமாய பீமாதிஹராய ஸம்பவே நாகாய ஸாந்தாய மனோஹராய
மஹாஜடாஜூடதராய பூதயே ஸ்ரீகும்பலிங்காய நமஸ்ஸிவாய

சத்ருகளுக்கு பயத்தை அளிப்பவரும் கொடுமையான மனோநோயை நீக்கு
கிறவரும் சுகத்துக்கு இருப்பிடமான வரும் நாகங்களை ஆபரணமாகத் தரித்த 
வரும் சாந்த வடிவினரும் பக்தர்களின் மனதைக் கவர்பவரும் பெரிய
 ஜடையைத் தரித்தவரும் விபூதியின் வடிவமாக இருப்பவருமான, கும்பலிங்கமா

ன 
 பரமேஸ்வரா... நமஸ்காரம்.

ஸர்வாகமாம்நாய ஸரீரதாரிணே ஸோமார்க்க 
நேத்ராய மஹேஸ்வராய
யக்ஞாய யக்ஞேஸ்வர பூஜிதாய ஸ்ரீகும்பலிங்காய நமஸ்ஸிவாய

எல்லா வேதங்களையும் சரீரமாகக் கொண்டவரும் சந்திர-சூரியரைக் கண்களாக உடையவரும் மகேஸ்வரரும் யாக வடிவாய் திகழ்பவரும் யக்ஞேஸ்வர ரான திருமால் வடிவாய் பொலிபவருமான கும்பலிங்கமான பரமனே... நமஸ்காரம்.

காத்யாயனீ காமித தாயகாய துர்கார்த்த தேஹாய க்ருதாகமாய
காலாய காலேஸ்வர பூஜிதாய ஸ்ரீகும்பலிங்காய நமஸ்ஸிவாய

காத்யாயனீ தேவியைப் போல் வேண்டியதெல்லாம் அருள்பவரும் துர்க்கா தேவியை பாதி சரீரமாகக் கொண்டவரும் ஆகம சாஸ்திரங்களை உருவாக்கி யவரும் காலத்தின் வடிவாய்த் திகழ்பவரும் சூரியபகவானால் பூஜிக்கப்பட்டவருமான, கும்பலிங்கமான சிவபெருமானே... நமஸ்காரம்.

No comments:

Post a Comment