Saturday, November 15, 2014

சம்பக சஷ்டி தோன்றிய வரலாறு



ஹிரண்யாட்சகன் என்ற அரக்கன் பெரிய சிவபக்தன் இவன் குழந்தை வரம் வேண்டி தவம் புரிகிறான்.  தாருகாவன அழிவிற்குப் பிறகு ஈஸ்வரன் யோகா நிஷ்டையில் இருக்கையில் பார்வதி தேவி விளையாட்டாக ஈஸ்வரனின் கண்களை மூடி விடுகிறாள்.   ஈஸ்வரன் கண்களை திறந்தவுடன் ஹிரண்யாரட்சகனைப் பார்கிறார். ஹிரண்யாட்சகனுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன.   அதில் ஒன்று குருடாக இருந்ததால் அந்தகாசுரன் என்றும்இரண்டாவது குழந்தை சம்பகாசுரன் என்றும் அழைக்கைப்பட்டனர்.  இவர்கள் இருவரும் அதிபராக்கிரமம் படைத்தவர்களாக இருக்கின்றனர்.  இவர்கள் பெரிய சிவபக்தர்கள்.  இவர்கள் தேவர்களைப் பல கொடிய இன்னல்களுக்கு ஆளாக்குகின்றனர்.  உலகெங்கும் ஒளியே இல்லாமல் இருக்கிறது.  இருள் சூழ்ந்த உலகில் அசுரர்களின் தீயச்செயல்கள் பெருகுகின்றன. 

அசுரர்களின் மாயையால் இருள் சூழ்ந்து நின்ற உலகை விடுவிக்க தேவர்கள் சிவபெருமானை வேண்டி நின்றனர்.  தாருகா (வனத்தை) புரம் அக்கினி சாந்தமாகி சிவனின் நெஞ்சில் சிறு குழந்தையாக இருந்தது.  அதை சக்தி தேவி தமது குமாரனாக எடுத்து வளர்த்து வந்தாள்.  தேவர்களின் துயர் நீக்க அக்கினிகுஞ்சுக்கு ஈசன் ஆணையிடஅதில் விஸ்வரூபம் எடுத்தவர் (வந்தவர் தான்) பைரவர்.  தேவர்களை காக்க எழுகிறார்.

முதலில் பிரிவாக செயல்பட்டுபிறகு 64 மூர்த்தங்களில் 64 சக்தி  
கணங்களுடன் செயல்பட்டு அந்தகாசுரனையும்சம்பகாசுரனையும் குமார சஷ்டியன்று வதம் செய்கின்றார். தனது பூத கணங்களுடன் ஒருவராக அவர்களை சேர்த்துக்கொள்கின்றார்.

சிவபக்தர்களான அரக்கர்களை அழித்த தோஷம் நீங்குவதற்காக ஸ்ரீ யோகபைரவர் தனது வலது கரத்தில் சிவலிங்கத்தை வைத்துக்கொண்டு பூஜை செய்து கொண்டிருக்கிறார்.  இடது கரத்தை தொடையில் வைத்தவாறு காட்சியளிக்கிறார்.

குமார ரூபமாக இருந்து அசுரர்களை வதம் செய்த நாளை குமார சஷ்டி என்றும்சம்பக சஷ்டி எனவும் அழைக்கப்பட்டு கார்த்திகை மாதம் வரும் அம்மாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை திதியன்று காப்பு கட்டுதல் விழாவுடன் துவங்கி ஆறு நாட்கள் விரதம் அனுஷ்டித்து தினம்தோறும் அஷ்ட பைரவர் ஹோமம்அபிஷேக ஆராதனைகள் அதிவிமர்சையாக நடைபெறுகின்றன.  கொடிய துன்பம் தீர்த்துநெடிய இன்பம் தந்த இந்த குமார சஷ்டி நாளில் விரதம் இருந்து வழிபட எல்லா நன்மைகளையும் தருவார் ஸ்ரீ யோகபைரவர்.

No comments:

Post a Comment