Saturday, November 22, 2014

நாகம் அங்குசத்துடன் விநாயகர்



பொதுவாக விநாயகரின் இடது கையில் அங்குசமும், வலது கையில் பாசக் கயிறும் இருக்கும். ஆனால் சங்கரன் கோயிலில் உள்ள சங்கரநாராயணசாமி கோயிலில் வீற்றிருக்கும் சர்ப்ப விநாயகர், வலது கையில் அங்குசமும், இடது கையில் சர்ப்பமும் கொண்டு அருள் பாலிக்கிறார்.

இந்த விநாயகரை வழிபட்டால் சர்ப்பதோஷம் நீங்கும். இவ்வாலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் காலசர்ப்பதோஷம் நீங்க பூஜைகள் செய்யப்படுகிறது. இங்கே சங்கன், பதுமன் என்ற நாகர்களின் தவத்துக்கு இரங்கிய சங்கர நாராயணர் அவர்களுக்கு காட்சியளித்தார். எனவே கோயிலில் உள்ள தெப்ப குளத்திற்கு நாகசுனை என்று பெயர். அதில் நீராடி சர்ப்ப விநாயகரை வழிபட்டால் வாழ்வில் அனைத்து வளங்களும் உண்டாகும்.

No comments:

Post a Comment