Friday, October 24, 2014

ஆன்மிகக் கேள்விகள் அறிவோம் ...





                                  ஆன்மிகக் கேள்விகள் அறிவோம் ...

அன்றாட வாழ்வில் சில சொற்களை கேட்டிருப்போம் , பிரயோகப்படுத்துவோம் , அனால் அவற்றின் உண்மையான 
பொருள் அறிந்திருப்பதில்லை .

இங்கே சில இவன் அறிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்


1. பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு என்ன பெயர்?

திரவிய சுத்தி.


2. வாசனை தீர்த்தத்தை ஈசுவர பிரீதிக்காக சமர்ப்பித்தலுக்கு என்ன பெயர்?

பாநீயம்

3. ஆன்மாவுக்குரிய ஞானமுடைமையை ராமானுஜர் அழைப்பது எவ்வாறு?

பக்தி ஞானம்


4. பகவான் கிருஷ்ணனின் உபதேசமாக இருப்பது எது?

கடமையை செய்; அதன் பலனில் பற்று வைக்காதே


5. "நல்லவர்க்கில்லை நாளும் கோளும்' என்று உரைத்தவர் யார்?

திருஞானசம்பந்தர்.

6. திருஞான சம்பந்தரை குறிக்கும் பாராட்டு மொழிகள் எவை?

ஞானத்திருவுரு, நான்மறையின் தனித்துணை.

7. தேவாரத்தின் பொருள் என்ன?

தேவனுக்குரிய மாலைகள்.


8."காரி உண்டிக் கடவுள்' என்று புறநானூற்றுத் தொடரில் வருகின்ற "கடவுள்'

சிவபெருமான்.


9. கோயில் வடிவமைப்பில் வேசர என்பது என்ன?

அரை வட்ட வடிவ விமானம்.


10. மந்திரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

சப்தப் பிரம்மம் அல்லது அட்சரப் பிரம்மம்.

சம்ப்ரதாயம் தெரிந்துகொள்ளுங்கள் , புரிந்துகொள்ளுங்கள் பொருள்

No comments:

Post a Comment