Wednesday, September 24, 2014

மேல்மலையனூர் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம்!
செப்டம்பர் 24,2014


செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு நடந்த மாகாளய அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையிலும்  லட்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு மாகாளய  அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்து. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளி காப்பு அலங்காரம் செய்தனர்.  வழக்கமாக இரவு 12 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கும்.

நேற்று இரவு 7.30 மணிக்கு திடீரென மழை கொட்டியது. மேல்மலையனூரில் உள்ள தெருக்களில் மழை நீர் ஓடியது. பல இடங்கள் சேறும்  சகதியுமானது. கோவில் பகுதியிலும் பக்தர்கள் உட்காரவும் இடமில்லை. மேலும் மழை வருவதை போல் மேகமூட்டமும், மின்னலும் இருந்தது. என வே அரைமணி நேரம் முன்னதாக 11.30 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்தை துவங்கினர். ஊஞ்சல் மண்டபத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந் தருளியபோது கோவில் பூசாரிகளும், பக்தர்களும் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். இரவு 12.30 மணிக்கு ஊஞ்சல்  உற்சவம் முடிந்தது.  மழையையும் பொருட்படுத்தாமல் லட்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். இந்து சமாய அறநிலையத்துறை உதவி ஆணையர்  பிரகாஷ், அறங்காவலர் தலைவர் சரவணன் மற்றும் அறங்காவலர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.  செஞ்சி டி.எஸ்.பி., முரளிதரன்  தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்தனர். தமிழகம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள்  இயக்கப்பட்டன.

No comments:

Post a Comment