Tuesday, September 23, 2014

பழநியில் நாளை நவராத்திரிவிழா: காப்பு கட்டுதலுடன் துவக்கம்!
செப்டம்பர் 23,20 
14


பழநி : பழநி மலைக்கோயில் மற்றும் உபகோயில்களில் நவராத்திரி விழா நாளை காப்புகட்டுதலுடன் துவங்குகிறது.. இவ்வாண்டு பழநியில் நவராத்திரி விழா செப்., 24 முதல் அக்., 4 வரை நடக்கிறது. இதை முன்னிட்டு, பெரியநாயகியம்மன் கோயிலில் காலை 10 மணிக்கு மேல் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, காப்பு கட்டுதல் நடக்கிறது. கோயில் யானை கஸ்தூரிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து காப்பு கட்டப்படும். உச்சிகாலபூஜை வேளையில் திருஆவினன்குடி கோயிலும், மலைக்கோயிலில் சண்முகர், வள்ளி,தெய்வானை மற்றும் துவாரபாலகர்களுக்கு காப்புகட்டுதல் நடக்கிறது. போகர் ஜீவசமாதியில் காலை 10 மணி காப்புகட்டுதல் நடக்கிறது. புவனேஸ்வரி அம்மன் புலிப்பாணி ஆஸ்ரமத்திற்கு எழுந்தருள உள்ளார். பெரியநாயகியம்மன் கோயிலில் விழாநாட்களில் மாலை 6 மணிக்கு நாள்தோறும் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடக்கிறது. கொழு அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து, பிரசாதம் வழங்கப்படுகிறது.

அம்புபோடுதல் நிகழ்ச்சி: அக்.,3ல் நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, அம்பு, வில் போட்டு, வன்னிகாசூரவதம் செய்தல் நடக்கிறது. மாலை 5 மணிக்குமேல் தங்ககுதிரை வாகனத்தில் முத்துக்குமார சுவாமி புறப்பட்டு கோதைமங்கலம் சென்று அம்புபோடுதல், வன்னிகாசூரன் வதம் நடக்கிறது. விழா நடைபெறும், ஒன்பது நாட்களிலும் மாலையில் பக்திசொற்பொழிவு, நாதஸ்வரம், பக்தி இன்னிசை, பரதநாட்டியம் போன்ற கலைநிகழ்ச்சிகள் பெரியநாயகியம்மன் கோயிலில் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment